“சகிப்பு தன்மையுடன் ஆற்றும் சேவையே செவிலியர் பணி”

நேரு நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்வு

கோவை நேரு காலேஜ் ஆஃப் நர்சிங் அண்டு ரிசர்ச் இன்ஸ்ட்டியூட்டின் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. நர்சிங் மாணவ மாணவியர்களை வரவேற்க்கும் ‘நியுபிஸ் 2022’ நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவிற்கு கோவை கங்கா நர்சிங் கல்லூரியின் டீனும் முதல்வருமான எஸ்தர் ராகேல் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக திருமலையாம்பாளையம், பிரைமரி ஹெல்த் சென்டர், உதவி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மித்துன் மனோகர் கலந்து கொண்டார்.

நேரு கல்வி குழுமங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலருமான கிருஷ்ணதாஸ் தலைமை வகித்தார். செயலாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான கிருஷ்ண குமார் வாழ்த்துரை வழங்கினார். விழாவிற்கு வந்திருந்தவர்களை நேரு காலேஜ் ஆஃப் நர்சிங் அண்டு ரிசர்ச் இன்ஸ்ட்டியூட்டின் முதல்வர் பியூலா எஸ்தர் தங்கம் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினர் எஸ்தர் ராகேல் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்து பேசியதாவது: செவிலியர் பணி என்பது தொழில் அல்ல ஒரு வகை தொண்டு! ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை செய்யும் முழு அர்ப்பணிப்பு! சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சகிப்பு தன்மையுடன் ஆற்றும் மகத்தான சேவையே செவிலியர் பணி.

நவீன செவிலியர்களின் முன்னோடியாக திகழ்பவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். இவர் இங்கிலாந்தில் பிறந்து தன்னை செவிலியர் பணியில் ஈடுபடுத்தி கொண்டார். நவீன தாதியியல் முறையை உருவாக்கி செவிலியர் பயிற்சி பள்ளியையும் இவர் தொடங்கினார். இன்று செவிலியர் படிப்பில் டிப்ளமோ முதல் முனைவர் பட்டம் வரையிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது. எனவே அவரின் சேவையை நாமும் தொடர வேண்டும் என்று பேசினார்.