புரோசோன் மால் ‘தீபாவளி கொண்டாட்டம்’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

புரோசோன் மால், ‘தீபாவளி கொண்டாட்டம்’ என்ற ஷாப்பிங் கொண்டாட்டத்தை அறிவித்து இருந்தது. இந்த ஷாப்பிங் திருவிழாவில் பொது மக்கள் குடும்பத்துடன் பங்கேற்று, குதுகாலத்துடன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இந்த விற்பனையில் ரூ.4999 மேல் பொருட்கள் வாங்குவோருக்கு பம்பர் பரிசுகளும் ரூ.9999 மேல் வாங்குவோருக்கு 1000 ரூபாய்க்கான வவுச்சர் மற்றும் நிச்சய பரிசுகளும் உள்ளன என்று அறிவிக்கப்டிருந்தன.

போட்டிகளில் வெற்றிபெற்றவர்களை புரோசோன் மாலுக்கு ஷாப்பிங் செய்ய வந்திருந்த பொதுமக்களின் குழந்தைகள் தேர்ந்து எடுத்தனர்.

இதில் முதல் பரிசாக ஸ்டெர்லிங் ரிசார்ட் நிறுவனம் வழங்கிய குடும்பத்துடன் மலேசிய சுற்றுப்பயணம் பரிசை கோவை சேர்ந்த தயானந்த மகேஷ்வரிக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசாக டிவிஎஸ் நிறுவனம் வழங்கிய டிவிஎஸ் ஜுப்பிடர் இரண்டு சக்கர வாகனம் கோவையை சேர்ந்த கவுதமுக்கு வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசாக கோடக் பாங்க் வழங்கிய 10 கிராம் தங்க நாணயம் சேதுவுக்கு வழங்;கப்பட்டது.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை புலியகுளம் பகுதி காவல் ஆய்வாளர் நிஷா தோழத், கோவை ரேடியோ சிட்டியின் பொது மேலாளர் (கேரளா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகள்) ஜெர்ரி சிறப்பு விருந்தினராகவும், கேடக் மஹிந்திரா வங்கியின் மண்டல சந்தை மேலாளர் ஸ்ரீபாலாஜி, டி.வி.எஸ் நிறுவனத்தின் மண்டல தலைவர் பிரசன்னா, போட்டோ பாய்ஸ் குழுமத்தின் இயக்குனர் கனகராஜ் மற்றும் பொன்மனி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனர் சுரேஷ் ஆகியோர் கௌரவ விருந்தனராகவும் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

முன்னதாக விழாவிற்கு வந்திருந்தவர்களை புரோசோன் மால் முதன்மை தலைவர் (நிர்வாகம் மற்றும் நிதி), பாபு வரவேற்றார், மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் நாதன் முன்னிலை வகித்தார், செயலியக்க தலைவர் முசாமில் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் மற்றும் செயலியக்க மேலாளர் முரளி விழா முடிவில் நன்றி கூறினார்.

விழாவில் தொடக்கமாக மௌண்டைன் லிட்டில் ஸிப்ரா பள்ளி மாணவ மாணவியர்களின் நடனம் மற்றும் பிளையிங் மூவுஸ் நடன பள்ளியின் மாணவர்கள் புகைப்பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள், சாலை போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் இவற்றை நடித்து காட்டினர்.