என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு

டாக்டர்.என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரியில் பி.எட் மாணவ ஆசிரியர்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் ராமசாமி வாழ்த்துரை வழங்கினார்.

“ஒரு நல்ல சமுதாயம் வகுப்பறையில் வடிவமைக்கப்படுகிறது” என்ற தலைப்பில் அமைந்த இந்நிகழ்வில் கோவை மாநகராட்சிப் பள்ளியில் முதுநிலை ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற நல்லாசிரியர் விருதுபெற்ற ஆனந்தி கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார்.

இதில் தமது 35 ஆண்டுகால கற்பித்தல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதோடு, ஒரு நல்ல ஆசிரியராகத் திகழ ஆசிரியருக்கான தொழில் நெறிமுறைகளையும் மதிப்புகளையும் கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் பல்வேறு புகழ்பெற்ற கல்வி அறிஞர்கள் மற்றும் அறிவியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக எடுத்துரைத்து மாணவ-ஆசிரியர்களை ஊக்கப்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து மாணவ-ஆசிரியர்களுக்கு கற்பித்தல் நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்கும் நடைமுறைகளில் உள்ள முக்கியக் கற்பித்தல் திறன்களைப் பின்பற்றுவதற்கும் செயல்விளக்கம் மூலம் பயிற்சியளித்தார்.