பி.எஸ்.ஜி மருத்துவமனையில் பெண்களுக்கான ஓட்டப்பந்தய நிகழ்ச்சி

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் பெண்களுக்காக ‘பி.எஸ்.ஜி ஹார்ட்டத்தான்’ 22 (PSG HEARTATHON’ 22) என்ற ஓட்டப்பந்தய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை அன்று மருத்துவமனை மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி, பிரிக்காலின் தலைவர் வனிதா மோகன், பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ஹார்ட்டத்தானை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

ஏராளமான பெண்கள் இந்த ஓட்டப் பந்தய நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் வெற்றிபெற்ற பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பிருந்தா, பி.எஸ்.ஜி மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் புவனேஸ்வரன், பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி முதல்வர் சுப்பாராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.