ரோட்டரி கேலக்ஸி சார்பில் இலவச மருத்துவ முகாம்

கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள லாலா மஹாலில் ரோட்டரி கோயம்புத்தூர் கேலக்ஸி சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இந்த முகாம் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கம்யூனிட்டி சர்வீஸ் – மாவட்ட தலைவர் ரோட்டேரியன் மாருதி கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.

முகாமில் கண் பரிசோதனை, எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை பரிசோதனை, பொது மருத்துவம், பல் பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை ஆகியவை பொதுமக்களுக்கு செய்யப்பட்டது.