அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் வரும் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணா சிலைக்கு மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் வருகின்ற 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அன்று காலை 9.00 மணி அளவில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், காந்திபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.