கோவையில் எலக்ட்ரிக் வாகன விழிப்புணர்வு பேரணி

உலக மின்சார வாகன தினத்தை ஒட்டி கோவையில் எலக்ட்ரிக் வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார்.

உலக மின்சார வாகன தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் அதன் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று கோவை பந்தய சாலையில் தனியார் நிறுவன பங்களிப்புடன் கோவை மாவட்ட நிர்வாகம் சேர்ந்து இவி ரோட்ஷோ என்ற எலக்ட்ரிக் வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் எலக்ட்ரானிக் வாகனங்களின் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியானது கோவை பந்தய சாலையில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் தொடங்கி பந்தய சாலை முழுவதும் சுற்றி வலம் வந்து மீண்டும் வருமான வரி அலுவலகத்தை வந்தடைந்தது. இந்த பேரணியில் பல்வேறு நிறுவனங்களின் 50 க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.