கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

கேரள மாநிலத்தின் பாரம்பரிய ஓணம் பண்டிகை, வரும் 8 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரில் ஓணம் பண்டிகை விழா கொண்டாடப்பட்டது.

கல்லுாரியில் நடந்த இவ்விழாவினை, கல்லுாரி முதல்வர் அகிலா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில், மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கேரளாவின் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றனர்.

தொடர்ந்து, மாணவிகள் கல்லுாரி வளாகத்தில் பிரமாண்ட பூக்கோலமிட்டு, மாபலி மன்னர் வேடமணிந்தவர் அழைத்து வரப்பட்டார். ஓணத்தை வரவேற்கும் விதமாக பெண்கள் திருவாதிரை குழு நடனமாடியும், செண்டை மேளம் இசைத்தும், ஓணம் பாடல்கள் பாடியும் ஓணம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பின்னர் மாணவர் மன்றம் மூலம் களரிப்பயட்டு, குழுநடன நிகழ்ச்சிகள், பேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கேரளாவின் பாரம்பரிய உணவு அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இறுதியில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.