வேளாண் பல்கலையில் ஒட்டுண்ணி வளர்ப்பு பற்றி ஒரு நாள் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறை மூலமாக ‘ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் வளர்ப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள்’ பற்றிய ஒரு நாள் பயிற்சி வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெறுகிறது.

ஒட்டுண்ணி வகைகள், ஊண் விழுங்கிகள் / இரை விழுங்கிகள், நெல் அந்துப்பூச்சி வளர்ப்பு முறை, டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி வளர்ப்பு, புழு ஒட்டுண்ணி வளர்ப்பு, கண்ணாடி இறக்கைப் பூச்சி வளர்த்தல், பொறிவண்டு வளர்ப்பு, பப்பாளி மாவுப்பூச்சி ஒட்டுண்ணி அசரோபகஸ் வளர்ப்பு, பயிர் பாதுகாப்பில் ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் செப்டம்பர் 2 அன்று காலை 9.00 மணிக்குள்ளாக பூச்சியியல் துறைக்கு வந்து சேர வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்வதற்கு ரூ.900/ நேரிடையாக பயிற்சி நாள் அன்று செலுத்த வேண்டும்.

பயிற்சி நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

மேலும் விபரங்களுக்கு
தொலைபேசி எண் : 0422-6611214, 0422-6611414