யானைகளின் காப்பகமாக அகஸ்தியமலை அறிவிப்பு

தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக, அகத்தியமலை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு, முண்டந்துறை மற்றும் கன்னியாகுமரி புலிகள் காப்பகமாகவும் வன உயரின காப்பகப் பகுதிகளை உள்ளடக்கிய அகஸ்திய மலை, யானைகளின் காப்பகமாகவும் அமைந்துள்ளது.

எனவே, அப்பகுதியை யானைகள் காப்பகமாக அறிவிக்கும்படி, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதை ஏற்று அகஸ்தியமலைப் பகுதியை, யானைகள் காப்பமாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகமாகும்.

இதில், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், ஆழ்வார்குறிச்சி, சிங்கம்பட்டி, மன்போதை, கொழுந்துமாமலை, திருக்குறுங்குடி, களக்காடு, வனமூட்டி, மகேந்திரகிரி, நடுகாணி, வள்ளியூர் வனப்பகுதிகள் அடங்கும்.

அதேபோல், கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம், விளவன்கோடு, திருவெட்டாறு, தோவாளை வனப்பகுதிகளும் அடங்கும். மொத்தம், 1,197 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வனப்பகுதி, யானைகள் காப்பகமாக அறிவிக் கப்பட்டுள்ளது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வன பாதுகாப்பாளரும்  கள இயக்குனரரும் , அகஸ்தியமலை யானைகள் காப்பகம் கள ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது.

 

 

– பா . கோமதிதேவி