பெட்ரோல் பங்குகளிலும் இனி ‘காபி ரெடி’ கடை

கோவை சிந்தாமணி சிக்னல் அருகே உள்ள ஹெச்.பி பெட்ரோல் பங்கில் ‘காபி ரெடி’ என்ற காபி கடை திறக்கப்பட்டுள்ளது.

கோவையை மையமாக கொண்டு இந்த காபி ரெடி கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தற்போது 30 க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

தற்போது இந்த நிறுவனம் ஹெச்.பி பெட்ரோலியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி கிளைகளை துவக்கி வருகிறது.

அதன்படி, கோவை சிந்தாமணி சிக்னல் அருகே உள்ள ஹெச்.பி பெட்ரோல் பங்கில் காபி ரெடி கடையின் முதல் கிளை துவங்கியுள்ளது. இந்த கிளையை ஹெச்.பி பெட்ரோலியம் நிறுவனத்தின் கோவை மண்டல துணை பொது மேலாளர் வசுந்தராவ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து வசுந்தராவ் மற்றும் காபி ரெடி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ராஜேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஹெச்.பி பெட்ரோல் பங்குகளில் தற்போது 12 இடங்களில் காபி ரெடி கடை அமைக்கப்பட உள்ளது. மார்ச் மாதத்திற்குள் 50 கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும் கடைகள் அமைக்கப்பட உள்ளன என்றனர்.