கோவையில் ‘ஃபோர் ஸ்கொயர் மெடிக்கல் சென்டர்’ துவக்கம்

அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் ஒரு அங்கமான ஃபோர் ஸ்கொயர் மெடிக்கல் சென்டர் கோவை ராம் நகரில் துவங்கப்பட்டுள்ளது.

கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.ஜி.பக்தவத்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த மையத்தை துவக்கி வைத்தார்.

ஃபோர் ஸ்கொயர் மெடிக்கல் சென்டரில் சிறுநீரக, நீரிழிவு நோய் மற்றும் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் உள்ளமைக்கப்பட்ட மருந்தகத்துடன் கூடிய ஐ.சி.யூ பராமரிப்பு ஆகியவை அடங்கும்.

மருத்துவமனையை துவக்கி வைத்து டாக்டர் பக்தவத்சலம் பேசுகையில், இந்தியாவில் 20 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும், எனவே அதை ஆரம்ப நிலையில் சரியாக கண்டறிய வேண்டும் என்றார்.

மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவர் டாக்டர் டி.சரவணன் கூறுகையில், நீரிழிவு நிபுணர்கள், சிறுநீரகத்தில் உள்ள பிரச்சினையை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்தால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் அதிகம் தேவைப்படாது. சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் குறித்து தேவையற்ற அச்சம் கொண்டுள்ளனர். இன்றைய சுகாதாரப் பாதுகாப்பு முறையின் முன்னேற்றங்களுடன், நவீன மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

எனவே மக்கள் அச்சத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தரமான சிகிச்சை எடுக்க வேண்டும். சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உயிர்காக்கும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் போது அவர்கள் எப்போதும் டயாலிசிஸைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப கட்டத்தில் இதைச் செய்ய வேண்டும். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகளை மாநில அரசு சேர்த்துள்ளது என்றார்.