கோவையில் டோர்ஸ்டெப் கார் க்ளீனிங்கை அறிமுகப்படுத்தும் கிளின்ட்

கார்களை சுத்தப்படுத்தும் ஸ்டார்ட் அப் நிறுவனமான கிளின்ட், கோவையில் தனது டோர்ஸ்டெப் கார் க்ளீனிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

யூடியூப் பிரபலமும், சேரன் அகாடமியின் நிர்வாக இயக்குநருமான ஹுசைன் அகமது க்ளிண்டின் கோவை வணிகச் செயல்பாடுகளை துவக்கி வைத்தார்.

சென்னையில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனமானது வாடிக்கையாளரின் வீட்டிற்க்கே சென்று காரை சுத்தப்படுத்துவதுடன், நிலையான நீர் நிர்வாகத்தின் முன்னோடியாக விளங்கி சென்னையில் 5 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்களை முடித்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய கிளின்ட்டின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ விக்னேஷ் மகாதேவன், மக்கள் தங்கள் கார்களின் வழக்கமான பராமரிப்புக்கு உதவும் தொழில்முறை சேவை எதுவும் இல்லை. கார் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் இந்த சிக்கலை தீர்க்கவும், பொருளாதார ரீதியாக சிரமப்படும் மக்களுக்கு பயிற்சி மற்றும் தரமான பகுதி நேர வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் கூடுதல் வருமான வாய்ப்புகளை வழங்குவதையும் கிளின்ட் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையின் ஒருங்கிணைந்த பகுதியான கோவையில் விரிவாக்கம் செய்தது உற்சாகமாக உள்ளது. 15 முதல் 20 நிமிடங்களில் காரைச் சுத்தம் செய்வதற்கான தரப்படுத்தப்பட்ட செயல்முறையை கிளின்ட் உருவாக்கியுள்ளது என்றார்.

கிளின்ட்டின் வளர்ச்சித் தலைவர் வினூத் சுப்ரமணியன் பேசுகையில்: கார்களின் வழக்கமான பராமரிப்பு மற்றும் பராமரிப்பில் சிறந்த தரம், அதிர்வெண், வசதி, நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை கார் உரிமையாளர்களுக்குக் கொண்டு வருவதில் கவனம் செலுத்துகிறோம். அடுத்த சில நாட்களில் திருப்பூரில் உள்ள பின்னலாடை நகரத்தில் தொடங்கி இந்தியா முழுவதும் சேவைகளை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.