10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த அலிபாபா நிறுவனம்

சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா, பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தனது நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக சௌத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜூன் காலாண்டில் 9,241 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. சமீபத்திய பணிநீக்கத்துடன் அலிபாபா ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கையை சுமார் 2,45,700 ஆக குறைத்துள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது.

உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் சந்தையான சீனாவில் தொடர்ச்சியான ஒழுங்குமுறை அழுத்தம், மந்தமான நுகர்வு மற்றும் மந்தமான பொருளாதாரம் ஆகியவற்றை எதிர்கொள்வதால், குறைக்கப்பட்ட ஊதியம், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயல்திறனை மேம்படுத்துவதற்கும், அலிபாபாவின் புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளை பிரதிபலிக்கிறது என்று அறிக்கை கூறுகிறது.

மேலும், இணையத்துறையில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த அலிபாபா நிறுவனத்திற்கு சீன அரசாங்கம் அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அலிபாபா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் ஜாங் யோங் கூறுகையில், இந்த ஆண்டின் பிற்பகுதியில் சுமார் 6,000 புதிய பட்டதாரிகளை அதன் தலைமையகத்தில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதன் காரணமாக புதிய ஆட்களை பணியமர்த்த அலிபாபா நிறுவனம் முடிவு செய்து, இதன் மூலம் நிறுவனத்தின் வருவாயை ஈட்ட இந்த பணி நீக்கம் காரணம் என கூறப்படுகிறது.

வளர்ச்சி மற்றும் வருவாயில் சரிவைத் தொடர்ந்து, ஊழியர்களை பணிநீக்கம் செய்த பல தொழில்நுட்ப நிறுவனங்களில் நெட்ஃபிலிக்சம் ஒன்று. நிறுவனம் சந்தாதாரர்களின் வளர்ச்சி மற்றும் வருவாயில் சரிவைக் கண்ட பிறகு, மொத்தம் 450 ஊழியர்களையும் பல ஒப்பந்தக்காரர்களையும் பணிநீக்கம் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.

நெட்ஃபிலிக்சின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், செலவினங்களைக் கட்டுப்படுத்தவும், செலவுகள் அவற்றின் மெதுவான வருவாய் வளர்ச்சிக்கு ஏற்ப இருப்பதை உறுதிப்படுத்தவும் பணிநீக்கங்கள் செய்யப்பட்டுள்ளன என்று கூறியது.