இலக்கை நிர்ணயித்து செயல்பட்டால் நீங்களும் தலைவராக மாறலாம்!

கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி. ராமசாமி

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் பிரவர்த்தனா – 2022 என்ற பெயரில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பாலுசாமி வரவேற்புரையும், கல்லூரியின் செயலர் மற்றும் ஆலோசகர் ராமசந்திரன் வாழ்த்துரையும் வழங்கினர்.

கே.பி.ஆர் குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.பி. ராமசாமி தலைமையுரை வழங்கி கூறுகையில்: மாணவர்களை ஒழுக்கமானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும், எதிர்கால சமூக தலைவர்களாகவும் உருவாக்குவதே எங்கள் நிறுவனத்தின் தலையாய கல்விப்பணியாகக் கொண்டு செயல்படுகிறோம். மாணவர்கள் தங்களது இலக்கை நிர்ணயித்து உரித்த நேரத்தில் பணியைச் செய்வதன் வாயிலாக நீங்களும் தலைவர்களாக மாறலாம் என ஊக்கமளித்தார்.

நமது நம்பிக்கை இதழின் பொறுப்பாசிரியர், எழுத்தாளர் மற்றும் தன்னம்பிக்கைப் பேச்சாளர் மரபின் மைந்தன் முத்தையா நிகழ்வில்ன் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டார்.

அவர் பேசுகையில்: மாணவர்கள் வெற்றியாளர்களாக உருவாவதற்கு வேண்டிய அடிப்படைப் பண்புகளைக் கல்வி வாயிலாகவே பெறமுடியும் எனக் கூறினார். தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதன் வாயிலாக மாணவர்கள் சிறந்த ஆளுமைகளாகத் திகழ முடியும் எனவும் ஆலோசனை வழங்கினார்.

மேலும் மாணவர்கள் சமூக விமர்சனங்களைக் கண்டு துவண்டுவிடாமல் நேர்மையாகச் செயல்பட்டால் நமது கே.பி.ஆர் ஐயா அவர்களது கனவுத் தலைவர்களாக நீங்கள் மாறலாம் என எடுத்துரைத்தார்.

நிகழ்வின் நிறைவாக மேலாண்மைத்துறைப் புலமுதன்மையர் ஷியாம்சுந்தர் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரி துறைசார் புல முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என 2500 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.