மாகாளியம்மனுக்கு பட்டு புடவைகளால் அலங்காரம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவையில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மனுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பட்டு புடவைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யபப்ட்டு இருந்தது. ஏராளமானோர் வழிபட்டு சென்றனர்

கோவையை அடுத்த பெரியகடை வீதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு தினங்களில் அம்மனுக்கு பல்வேறு பொருட்களை கொண்டு அலங்காரம் செய்யபடுவது வழக்கம் . இந்நிலையில், ஆடி வெள்ளியை முன்னிட்டு இன்று காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது . பின்னர், 108 பட்டு புடவைகளை கொண்டு  அம்மனுக்கு அலங்கரிக்கபப்ட்டது. பட்டு படவைகளால் அம்மனுக்கு அலங்கரிக்கபட்டதை , ஏராளமான பொதுமக்கள் கண்டு, வழிபாடு செய்தனர். பிறகு பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.