சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி சி.பி.எஸ்.இ தேர்வில் 100 % வெற்றி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியின் மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் நூறு சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர்.

பனிரெண்டாம் வகுப்பு மேலாண்மைப் பிரிவு வணிகவியல் (Business Studies) பாடத்தில் 100/100 மதிப்பெண்களைப் பெற்ற மாணவர் முகில் பள்ளி அளவில் 500-க்கு 483 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். மாணவி சிவப்பிரியா 480 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், மாணவி சங்கமித்ரா 479 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

10 ஆம் வகுப்பில் மாணவர் நவீன் சந்தர் 484 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி நிதன்யா 480 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், மிதுன் செந்தில் குமார் 479 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

பத்தாம் வகுப்பு கணிதப் பாடத்தில் நிதன்யா, நிதாஸ்ரீ, அறிவியல் பாடத்தில் சர்வேஸ் ஆகியோர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவியரைப் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி, பள்ளிச் செயலர் கவிதாசன், பள்ளியின் கல்வி ஆலோசகர் கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.