மார்கரெட் ஆல்வா குடியரசு துணைத் தலைவராக தேர்வு

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார்

குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஜூலை மாதம் 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக ஜெகதீப் தன்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்ட்டிரிய ஜனதா தளம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டன. அதன் முடிவில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 19 ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் மார்கரெட் ஆல்வா வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவா, ராஜஸ்தான், குஜராத் மாநிலத்திலும் ஆளுநராக இருந்துள்ளார். கடைசியாக உத்தரகாண்ட் ஆளுநராக இருந்த அவர், 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். சிறிது காலம் மாநிலங்களவை துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2004 ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் மார்கரெட் ஆல்வா இருந்துள்ளார்.