முடி சிவப்பாக இருந்தால்  படம்  இலவசம்

லண்டனில் எப்போதும் காணாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. பிரிட்டன் நாட்டில் வழக்கமாக  21-30 டிகிரி வெயில் இருக்கும். ஆனால்,  இம்முறை கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பிரிட்டன் நாட்டில் உள்ள கோடைவெயில் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் படி, ஷோகேஸ் சினிமா நிறுவனம்  ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் ஜூலை 18,19ம் ஆகிய இரு நாட்களில், தியேட்டருக்கு வரும் மக்களுக்கு கண்டிஷனுடன் இலவசமாக படம் பார்க்கும் சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, தியேட்டருக்குள்ளே வரும் பார்வையாளர்களுக்கு கட்டாயம் சிவப்பு நிறம் முடி இருக்க வேண்டும். அப்படி வருபவர்களுக்கு மட்டுமே இலவசம் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு சினிமா தியேட்டரில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ,ஷோகேஸ் தியேட்டரின் பொது மேலாளர், “பிரிட்டன் நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆகவே, இந்த வெயிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் நாங்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.

அதன்படி எங்கள் திரையரங்கிற்கு வரும் மக்களில் சிவப்பு முடி வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கட்டணம் இலவசம். இந்தச் சலுகை  வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் அமலில் இருக்கும். இந்தச் சலுகையை பயன்படுத்தி அவர்கள் குளிர்சாதன வசதி கொண்ட திரையரங்கில் படம் பார்த்து ரசிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.