வி நிறுவனத்தின் ‘ரெடி ஃபார் நெக்ஸ்ட்’ திட்டம் அறிமுகம்

உலக எம்எஸ்எம்இ தினத்தை முன்னிட்டு தொலைதொடர்பு நிறுவனமான வி, தனது வி பிசினஸ் மூலம் எம்எஸ்எம்இக்கள் தங்களது திறன் வளர்ச்சியை வேகமாகப் பெற உதவும் வகையில் ரெடி ஃபார் நெக்ஸ்ட் எனும் ஒரு சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எம்எஸ்எம்இக்களின் டிஜிட்டல் பயணம் முழுவதிலும் உதவும் நோக்கோடு ‘ரெடி ஃபார் நெக்ஸ்ட்’ திட்டத்தினை கட்டமைத்துள்ளது வி பிசினஸ். நிபுணர்களின் ஆலோசனைகளோடு உருவாக்கப்பட்ட இத்திட்டமானது, எம்எஸ்எம்இக்கள் அதிவேகமான வளர்ச்சியைப் பெற உதவும் அனைத்து சாத்தியமுள்ள தேவைகளையும் பூர்த்தி செய்யும்.

இம்முயற்சி குறித்து வி நிறுவனத்தின் தலைமை நிறுவன வர்த்தக அலுவலர் அரவிந்த் நெவாடியா பேசுகையில், இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் எம்எஸ்எம்இக்கள், ஜிடிபியில் 30 சதம் பங்களிக்கின்றன. பல்வேறுபட்ட கண்டுபிடிப்புகளுக்கு குறிப்பிட்ட தீர்வுகள், வலுவான தொழில்நுட்ப ஆதரவு, நிலையான வளர்ச்சிக்கு நம்பிக்கையான கூட்டு நிறுவனங்கள் தேவை. எம்எஸ்எம்இக்களின் எதிர்காலத்தைச் சிறந்ததாகக் கட்டமைப்பதிலும், அடுத்த கட்டத்தை அடைவதற்கான நீண்ட காலத் தீர்வுகளை வழங்குவதிலும் எங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ’ரெடி ஃபார் நெக்ஸ்ட்’ அமையும்.

அவர்களது முடிவெடுக்கும் செயல்பாட்டை எளிமைப்படுத்துவதையும், அவர்களது வர்த்தகம் எதிர்காலத்தில் சிறப்பாக அமையப் பெறுவதற்கான சரியான கவனம், செல்லும் திசை மற்றும் தீர்வுகளை அடையாளப்படுத்த உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த திட்டத்தின் மூலமாக 2,50,000 எம்.எஸ்.எம்.இ.க்கள் அதிவேக வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்தார்.