ஹரிபவனம் நிறுவனர் சிலை திறப்பு: கவிஞர் வைரமுத்து திறந்து வைத்தார்

ஹோட்டல் ஹரிபவனம் தனது 50 வது ஆண்டு பொன் விழாவினை சமீபத்தில் கொண்டாடியது. மேலும் ஒரு புதிய கிளையினை அவினாசியில், திருப்பூர் – அவினாசி தேசிய நெடுஞ்சாலையின் சர்விஸ் டிராக்கில் சுப்ரீம் விஸ்டா காம்ப்ளக்ஸில் திறந்துள்ளது.

இந்த கிளையில் ஹோட்டல் ஹரிபவனம் நிறுவனர் ராஜுவின் திருவுருவச் சிலை திறப்பு விழா மற்றும் சிறப்பு பட்டம் சூட்டும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு திருவுருவச் சிலையை திறந்து வைத்து, ராஜு அவர்களுக்கு ‘அசைவ சக்கரவர்த்தி’ எனும் பட்டத்தினை சூட்டி கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோவையைச் சேர்ந்த பல முக்கிய தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

நிகழவில் வைரமுத்து பேசியதாவது: ஹரிபவனம் நிறுவனர் ராஜுவின் அடிப்படை கொள்கையே தரம் தான். உணவிற்கு தேவையான ஒவ்வொரு பொருளையும் தரமுள்ளதாகவே பார்த்து வாங்குவார். அவரது கடையில் பணிபுரியும் சமையல்காரருக்கு முறையான பயிற்சியினை வழங்கி, தனது ஞானத்தை கூட மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் குணம் கொணடவர் என்றால் அது மிகையாகாது என பாராட்டிப் பேசினார்.

தன் கடைக்கு உணவருந்த வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் வயிறார சாப்பிட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை கொண்டவர் ராஜு. கோவைக்கு என்று ஒவ்வொரு துறையிலும் ஒரு தனித்த அடையாளம் உண்டு எனக் கூறிய அவர், அதில் அசைவத்துக்கு ஓர் அடையாளம் இருந்தால் அது ஹரிபவனம் ஹோட்டலாக தான் இருக்கும் எனக் கூறினார்.

“நீ செய்யும் எந்த தொழிலிலும் கடுகளவாவது தர்மம் கலக்காவிட்டால் அது நிலைபெறாது” என ராஜு அவர்களின் தொழில் தர்மத்தை மேற்கோள் காட்டி, ஹரிபவனம் இன்னும் பல கிளைகளை திறக்க வேண்டும் எனக் கூறி வாழ்த்தினார்.

 

PHOTOS: Sathis Babu