ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஐஎஸ்டிசி ப்ராஜெக்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி மற்றும் ஐஎஸ்டிசி ப்ராஜெக்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனக் கல்விப் பிரிவின் தலைவர் மகேஷ் சத்யன் இருவரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கல்லூரி முதல்வர் சித்ரா பேசியதாவது, இந்த ஒப்பந்தத்தின் மூலம் எங்களது கல்லூரி மாணவிகள் வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் குறுகிய காலப் பயிற்சிகள், மேற்கல்வி, பரிமாற்றச் செயல்திட்டங்கள் மற்றும் ஆய்வுப் பணிகளில் இணைந்து செயல்பட முடியும். மகளிர் கல்வியை உலகத்தரத்திற்கு எடுத்துச் செல்லவும் பெண்கள் உலகளாவிய அறிவும் அனுபவமும் பெற்று ஆளுமை மிக்கவர்களாக உருவாக வேண்டும் என்பதற்காகவும் இத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.