ஸ்ரீ ராமகிருஷ்ணா பார்மசி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் கீழ் செயல்பட்டு வரும் பார்மசி கல்லூரியின் 29 வது பட்டமளிப்பு விழா எஸ்.என்.ஆர். கலை அரங்கத்தில் நடைபெற்றது.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி இந்த நிகழ்விற்கு தலைமை ஏற்று தலைமை உரையாற்றினார். தமிழ்நாடு பார்மசி கவுன்சில் தலைவரும் டெல்வின் பார்முலேஷன் நிறுவனத்தின் இயக்குனருமான ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக நிகழ்வில் பங்கேற்றார். 250 க்கும் அதிகமான மாணவர்கள் தங்களின் பட்டங்களை இந்நிகழ்வில் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்லூரியில் பயின்ற தனமணி (2020), சங்கீதா மற்றும் ஜெகநாத் (2021) ஆகியோர் முனைவர் பட்டத்தை பெற்றனர். மாணவிகள் கீர்த்தி, பி.பார்ம் (2015-19) மற்றும் நித்தியா ராம்தாஸ், பி.பார்ம் (2016-20) ஆகியோர் கல்லூரியின் தங்கப்பதக்கத்தை பெற்றனர்.

மாணவர்கள் நிமிதா ட்ரீசா, பார்ம்.டி (2013-19) கெசியா அண் பாபு, பார்ம்.டி (2014-2020), எபின் சிபி,பார்ம்.டி (பீபி) (2016-19), ட்ரிஸ்ல் எம்.பாபு, பார்ம்.டி (பீபி) (2017-20) ட்ரெசா தாமஸ், எம்.பார்ம் (2017-19) மற்றும் விஷ்ணுஜா விஸ்வநாத், எம்.பார்ம் ஆகியோர் அவரவர் துறையில், கல்வியாண்டில் ஒட்டுமொத்த தரவரிசையில் முதல் இடம் பெற்றனர்.

கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் ‘பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டுடென்ட்’ விருதை தகுதியுடைய மாணவர்களுக்கு வழங்கியது. கல்லூரியின் முதல்வர் ரவி வரவேற்புரையாற்றினார் கல்லூரியின் துணை முதல்வர் கோபால்ராவ் நன்றியுரை வழங்கினார்.