இன்டெக் கண்காட்சியில் எல்.ஜி.யின் புதிய கம்ப்ரஸர் அறிமுகம்

கோவை கொடிசியாவில் நடைபெறும் இன்டெக் தொழில்நுட்பக் கண்காட்சியில் எல்ஜி – யின் கன்ட்ரோலருடன் கூடிய இண்டலிஜெண்ட் மற்றும் ஆற்றல்-திறனுள்ள LD சீரீஸ் இரண்டு-நிலை, டைரெக்ட் டிரைவ், டூப்ளெக்ஸ் கம்ப்ரஸர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து எல்ஜி எக்யூப்மென்ட்ஸ், நிர்வாக இயக்குனர், ஜெயராம் வரதராஜ் பேசியதாவது: எரிசக்தி திறன் என்பது தொழில்துறை முழுவதும் வளர்ந்து வரும் சிக்கலாக உள்ளது. வாடிக்கையாளர்கள் எப்போதும் அதிகரித்து வரும் மின்சாரச் செலவுகள், ஏற்ற இறக்கமான சந்தை தேவை மற்றும் குறைந்த அளவிலான தொழில்துறை தளம் ஆகியவற்றால் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

வழக்கமான கம்ப்ரஸர் தொழில்நுட்பத்தை மாற்ற எங்கள் தொழில்நுட்பக் குழுக்கள் ஒவ்வொரு நாளும் உத்வேகமாக முயற்சிக்கின்றன. 3HP முதல் 15HP வரையிலான டைரக்ட்-டிரைவ் ரெசிப்ரோகேட்டிங் ஏர் கம்ப்ரசர்களின் LD சீரீஸ் வரம்புகள் வாடிக்கையாளர்களுக்கு அதிக ஆற்றல் திறன், தொழில்துறையில் முன்னணி நம்பகத்தன்மை மற்றும் குறைந்த பராமரிப்பு ஆகியவற்றின் முக்கிய நன்மைகளை வழங்குகின்றன என்று தெரிவித்தார்.

எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் இயக்குனர் ISAAME (இந்தியா, தெற்காசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு), ராஜேஷ் பிரேம்சந்திரன் கூறியதாவது: புதிய கன்ட்ரோலர் பதிப்பின் மூலம், மோட்டார் மற்றும் டாப் பிளாக் ஆகிய இரண்டிற்கும் கூடுதல் பாதுகாப்புடன், LD சீரிஸ் கம்ப்ரசர்களின் நம்பகத்தன்மை அளவு அதிகரித்துள்ளது.

சிங்கிள் கண்ட்ரோல் மோட் கம்பிரஸரை அரைத் திறனில் இயக்க அனுமதிக்கிறது. எனர்ஜி ஆப்டிமைசேஷன் மோட் ஏற்ற இறக்கமான கம்பிரஸ்டு ஏர் தேவையை பூர்த்தி செய்ய அரை அல்லது முழு சுமை பயன்பாட்டிற்கு தானாக கட்டமைக்கிறது.

மேலும், செயல்பாட்டு பாதுகாப்பு என்பது வடிவமைப்பின் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. பாதுகாப்பு ஒரு முக்கியமான அம்சமாகும். பொதுப் பொறியியல், வாகனம், ஜவுளி, பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் மரவேலைத் தொழில்துறை பிரிவுகளில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு LD சீரீஸ் மிகச்சிறந்த கம்பிரஸ்டு ஏர் தீர்வை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்.