ஜே.எம்.ஜே ஹவுசிங் சார்பில் ‘ப்ராப்பர்ட்டி கார்ட்’ தகவல் மையம்

கோவையை சேர்ந்த ஜே.எம்.ஜே ஹவுசிங் நிறுவனம், மூன்று நாட்கள் நடைபெற உள்ள கோவை ப்ராப்பர்ட்டி கார்ட் எனும் தகவல் மையத்தை கோவை ரெசிடன்சி ஓட்டலில் துவக்கியுள்ளது.

கோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள் மற்றும் வில்லாக்கள் விற்பனையில் தனி முத்திரையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிறுவனம் ஜே.எம்.ஜே.ஹவுசிங்.

கோவையை சுற்றி வடவள்ளி, வெள்ளலூர், டி.வி.எஸ்.நகர் என நகரின் பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான தனி வீடுகள் கட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் புதிய திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் புதிய கோவை ப்ராப்பர்ட்டி கார்ட் எனும் தகவல் மையத்தை ஜே.எம்.ஜே ஹவுசிங் நிறுவனம் துவக்கியுள்ளது.

மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வில்சன் தலைமையில் நடைபெற்றது.

கோ.க்ளாம் ஷாப்பிங் கண்காட்சியுடன் இணைந்து நடைபெற்ற இதில், சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட அரிமா ஆளுநர் நடராஜன், முதல் நிலை ஆளுநர் ராம்குமார், ரோட்டரி கவர்னர் குரியச்சன், ஓய்வு பெற்ற நீதிபதி முகம்மது ஜியாபுதீன், காவேரி குழுமங்களின் தலைவர் விக்ரம் ரத்தோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மூன்று நாட்கள் நடைபெற உள்ள கோவை ப்ராப்பர்ட்டி கார்ட் குறித்து விற்பனை பொது மேலாளர் சசிதரன் கூறுகையில், அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையி்ல் வீட்டு மனைகள் மற்றும் வில்லாக்களை எங்களது நிறுவனம் விற்பனை செய்து வருவதாகவும், குறிப்பாக வீடு கட்டுபவர்களுக்கு எந்த வித சிரமமும் இன்றி வங்கி மற்றும் கட்டுமானம் தொடர்பான அனைத்தையும் நிறுவனம் முன்னின்று செய்து கொடுப்பதாக தெரிவித்தார்.