நன்கு பயில்வோம்; தரமான மருத்துவ சேவையை வழங்குவோம்! – கே.எம்.சி.ஹெச் மாணவர்கள் உறுதி

கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வொயிட் கோட் வழங்கும் விழா நடைபெற்றது.

இக்கல்லூரியின் 2021-2022 முதலாமாண்டு மாணவர்களுக்கு மருத்துவ சேவைத் துறையில் அவர்களை இணைத்து கொண்டதை குறிக்கும் வகையில் வொயிட் கோட் வழங்கும் விழா கே.எம்.சி.ஹெச் கலையரங்கில் நடைபெற்றது.

மசானிக் குழந்தைகள் நல மருத்துவமனையின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ராமசாமி மாணவர்களுக்கு வொயிட் கோட் அணிவித்து வாழ்த்தினார். மாணவர்கள் நன்கு பயின்று பயிற்சி பெற்று தரமான மருத்துவ சேவைகள் மக்களுக்கு அளிப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

முதலாமாண்டு மருத்துவ மாணவர்களும், பேராசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர். கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர்.