சங்கரா கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பில் “வணிகத்தில் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்” என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

முதல்வர் ராதிகா வரவேற்புரை ஆற்றினார். துணை இணைச் செயலாளர் நித்தியா இராமச்சந்திரன் தலைமை உரை ஆற்றினார். நமது நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு உதவும் வணிகத் துறையில் புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறினார்.

சிறப்பு விருந்தினராக கர்நாடகா ஸ்ரீ பகவான் மஹாவீர் ஜெயின் முதல் தரக் கல்லூரியின் வணிகவியல் துறையின் முதுநிலைப் பேராசிரியர் மற்றும் தலைவரான அந்தோணிகுரூஸ் தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார்.

அதைத் தொடர்ந்து கல்லூரியின் துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட் வாழ்த்துரை வழங்கினார்.

தொடக்க விழாவிற்குத் தலைமை விருந்தினராக சோஹார் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கணினி நெட்வொர்க்கின் தலைவர் திருமுருகன் சண்முகம் கலந்து கொண்டார். அவரது உரையில், வணிக செயல்முறைகள் தொழில்நுட்பத்துடன் நெறிப்படுத்தப்பட்டுள்ளமை, அவை குறைந்த விலை, நேரத்தைச் சேமிக்கின்ற தன்மை மற்றும் நிலையானவை என்பதையும், எதிர்காலத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள புதுமை நமக்கு உதவுகிறது என்றும் எடுத்துரைத்தார். முதல் தொழில்நுட்ப அமர்வுக்கும் அவர் தலைமை தாங்கினார்.

இரண்டாம் தொழில்நுட்ப அமர்வுக்கு, சேலம், சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிக நிர்வாகத் துறையின் உதவிப் பேராசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.