டாக்டர்.ஆர்.வி. கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

டாக்டர். ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.

இந்தப் பயிற்சிக்கு கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று பேசினார். கோவை, டெக்சாஸ் ரிவியூ நிறுவனத்தின் தொழில் மேம்பாட்டு துறையின் மேலாளர் நிருபமா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, “வேலைவாய்ப்பு பெறும் வழிமுறைகள்” பற்றி கூறினார்.

அவர் பேசுகையில்: மாணவர்கள் உலகில் எங்கு படிக்க விரும்பினாலும் டோஃபெல், டான்செட் போன்ற நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெறுவதற்கு பயிற்சி அளிக்கக்கூடிய பல்வேறு பயிற்சி மையங்கள் பல உள்ளன. அப்பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று தேர்ச்சி அடைந்தால் வெளிநாடுகளில் படித்து நல்ல வேலை வாய்ப்பினை பெறலாம்.

படிக்கும் பொழுதே படிப்பதற்கான கல்வி உதவித் தொகையும் பெற முடியும். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் சிறந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இதற்கான உரிமத்தை பெற்றிருக்கின்றன. மாணவர்கள் நல்ல வேலைவாய்ப்பை பெற்று முன்னேறுவதற்கான வழி வகைகளையும், பயிற்சி நிறுவனங்கள் செய்து வருகின்றன எனக் கூறினார்.