கோவில்பாளையம் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

முன்னணி பல்துறை மருத்துவமனைகளில் ஒன்றான கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை கோவில்பாளையத்தில் அமைந்துள்ள தனது மருத்துவ மையத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாமை ஏப்ரல் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்துகிறது.

கோவில்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெறும் இம்முகாமில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் பல்வேறு மருத்துவ துறைகள் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்கின்றன.

இம்முகாமில் இருதய மருத்துவம், நரம்பியல் மருத்துவம் (மூளை மற்றும் தண்டுவடம்), நுரையீரல் மருத்துவம், எலும்பு முறிவு மற்றும் மூட்டு மருத்துவம், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், சர்க்கரை மருத்துவம், பொதுநல மருத்துவம், தோல் நோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் பல் மருத்துவம் ஆகிய துறைகளில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் இலவச ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

மேலும் இந்த மாபெரும் மருத்துவ முகாமில் இலவச சர்க்கரை பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலசோனைகள் இலவசமாக அளிக்கப்படும். சிடி ஸ்கேன் 50% சலுகை கட்டணத்தில் செய்யப்படும். சிகிச்சைகள் மற்றும் இதர பரிசோதனைகளை 25% சலுகை கட்டணத்தில் பெறலாம்.

இந்த முகாம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 87541 87551