பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியில் தேசிய தாய்மை பாதுகாப்பு தினம் அனுசரிப்பு

தேசிய தாய்மை பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ வசதிகளை செய்து கொடுத்து மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதை இந்த நாள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

இதனை முன்னிட்டு பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியில் 19 வது ஆண்டு தேசிய தாய்மை பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

‘தாய் மற்றும் சேயை கொரோனா வைரஸில் இருந்து பாதுக்காக்க வீட்டிலேயே இருங்கள்” என்ற தலைப்பில் இளங்கலை மற்றும் முதுகலை செவிலியர் மாணவர்களுக்கு பென்சில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு கண்காட்சியாக வைக்கப்பட்டது.

இதில், மொத்தம் 45 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இதை மூத்த ஆலோசகர், டாக்டர் கிருஷ்ணப்ரியா MS, DGO பிஎஸ்ஜி மருத்துவமனை மற்றும் உதவி செவிலியர் கண்காணிப்பாளர், பிரியா RN.R.M.MSc(N) ஆகியோர் மதிப்பீடு செய்தனர். பின்னர் வெற்றியாளர்களுக்கு பரிசுகளும், பங்கேற்பாளர்களுக்கு இ-சான்றிதழும் வழங்கப்பட்டது.

மேலும் மருத்துவமனையில் உள்ள OBG வார்டுகளில் பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய தாய்மார்களுக்காக Mind Ticklers Game நடத்தப்பட்டது. இதில் சிறந்த மூன்று ஜோடிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.