ரோட்டரி கிளப் 3201 மாவட்ட ஆளுனர் பதவியேற்பு விழா 

ரோட்டரி கிளப் 3201 மாவட்ட ஆளுனர் பதவியேற்பு விழா மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் வெஸ்ட் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று(01.07.2018) கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தவர்களை ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் வெஸ்ட் ரோட்டேரியன் பி.ஆர்.சுப்ரமணியம் வரவேற்றார். ரோட்டரி மாவட்டம் 3201 ஆளுனராக ரோட்டேரியன் ஏ.வி.பதி பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு ரோட்டரி முன்னாள் ஆளுனர் வினோத் குட்டி பதவி பிரமானம் செய்து வைத்தார். ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் வெஸ்ட் தலைவராக ரோட்டேரியன் சசிகுமார் பதவியேற்றுக் கொண்டார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரோட்டரி சர்வதேச முன்னாள் இயக்குனர் டாக்டர்.பி.சி.தாமஸ் கலந்து கொண்டார்.

புதியதாக பதவியேற்றுக் கொண்டு பேசிய ஏ.வி. பதி  ரோட்டரி 3201 மாவட்ட ஆளுனர் இந்த மாவட்ட ஆளுனர் பதவி எனக்கு காலம் தந்த பரிசு. இந்த பரிசை மதிப்பு மிக்கதாக ஆக்க முழு முயற்சியுடன் பாடுபடுவேன். இயற்கை மற்றும் மக்களின் வாழ்க்கை சீரமைத்தல் நமது கடமை ஆகும். அதற்கான பணிகளை இன்றே தொடங்கிவிட்டேன். கொச்சின் யுனைட்டெட் அமைப்பு நமது ரோட்டரி பவுன்டேஷனுக்கு 1.50 லட்சம் அமெரிக்க டாலரை நிதியுதவியாக வழங்கியுள்ளது. இதற்காக அவர்களுக்கு எனது சார்பாகவும் உங்களது சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் பல அமைப்புகள், தனி நபர்கள், டாலர்களாக இன்று நிதி வழங்கியுள்ளர்கள். இன்று மட்டும் மொத்தமாக 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதி கிடைத்துள்ளது. இந்த ஆண்டு 10 லட்சம் நிதி பெற இலக்கு வைத்துள்ளோம்.

நமது ரோட்டரி கிளப் சார்பில் இந்த ஆண்டு “இயற்கையின் வழித்தடங்கள்” என்ற மையக்கருத்தை வைத்து நமது பயணத்தை தொடங்குவோம். நமது திட்டங்களும், செயல்பாடுகளும் இதையோட்டியே அமைந்திருக்கும். நமது இந்த ஆண்டு லட்சியமாக இயற்கையை காக்கும் வகையில் 10 லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளோம். இதன் முன் முயற்சியாக இன்று மட்டும் கோவையில் சுமார் 1300 மரக்கன்றுகளை நட்டுவைத்துள்ளோம். சகோதரத்துவத்தைப் வழியுறுத்தும் நோக்கில் பத்து லட்சம் மில்லி அளவு இரத்த தானம் செய்யவுள்ளோம். பொது மக்களுக்கு பத்து லட்சம் லிட்டர் அளவு சுகாதார குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வோம். பசியால் வாடும் 10 லட்சம் பேருக்கு உணவு கிடைக்க வழி செய்வோம். பத்து லட்சம் குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி புன்னகைக்க வைப்போம். ரோட்டரி தலைமைக்கு சமுதாய பணியாற்ற பத்து லட்சம் அமெரிக்க டாலர்களைப் நமது மாவட்டத்தின் மூலம் வழங்குவோம். என்று பேசினார்.

ரோட்டரி கிளப்பின் சார்பில் இந்த வருடம் நடைபெறவுள்ள நலத்திட்டங்களுக்காக, கொச்சி யுனைட்டெட் அமைப்பு ரூ.1.50 லட்சம் ரூபாயை நிதியுதவியாக கோவை மாவட்ட ரோட்டரி பவுண்டேஷனுக்கு வழங்கியுள்ளது.

விழா முடிவில் ரோட்டேரியன் செல்லா ஆர்.ராகவேந்தர் அவர்கள் நன்றி கூறினார்.