‘One Nation’ என்று பேசும் நீங்கள் ஏன் பாகுபாடு பார்க்கிறீர்கள் – மக்களவையில் கனிமொழி கேள்வி

தெற்கு ரயில்வேக்கு ரூ.59 கோடி மட்டும் ஒதுக்கியுள்ள ஒன்றிய அரசு, வடக்கு ரயில்வேக்கு ரூ.13,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது என்றும் ‘One Nation’ என்று எப்போதும் பேசும் நீங்கள் வடக்கு, தெற்கு பாகுபாடு பார்க்கலாமா? என்றும் மக்களவையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது: லாபத்தில் இயங்கும் ரயில்களை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு நஷ்டத்தில் இயங்கும் ரயில்களை மட்டுமே ஒன்றிய அரசு இயக்குகிறது. ரயில்வே துறையை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது. முந்தைய அரசு மீது பழி போடுவது ஏற்கத்தக்கது அல்ல.

வடக்கு ரயில்வேக்கு ரூ.13,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள ஒன்றிய அரசு, தெற்கு ரயில்வேக்கு ரூ.59 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. ‘One Nation’ என்று பேசும் நீங்கள் ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் ஏன் இந்த பாகுபாடு பார்க்கிறீர்கள். கடந்த 4 ஆண்டுகளில் தென்னிந்திய ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த தொகை வெறும் ரூ. 308 கோடி மட்டுமே.

ரயில்வே துறைகளில் தென்னிந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்படுகின்றன. மொழி தெரியாத பணியாளர்களால் மக்களின் உயிருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இந்தியா முழுக்க ரயில்வே துறையில் காலியாக இருக்கும் 2.65 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களையும் நிரப்பாமல் அப்படியே வைத்திருக்கிறது

கொரோனாவால் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்கென பிரத்தியேகமாக இணைக்கப்பட்ட ரயில் பெட்டிகள் நீக்கப்பட்டது. அவர்களுக்கு ஏதுவாக ரயில் நிலையங்கள் அமைக்கபட வேண்டும்.

கடந்த 3 ஆண்டுகளாக ரயில்வே துறையின் நிதிச் செயல்பாடுகள், குறைத்து, ஒதுக்கப்பட்ட நிதியைக் கூட முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. சரிசெய்யப்பட வேண்டியது நிறைய இருப்பினும், ஏன் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தாமல் இருக்கிறது என அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.