கே.பி.ஆர் கல்லூரியில் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் பொறியியல் ஆர்வலர்களுக்கு “பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு” குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அகிலா கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றினார். இதில் மாணவர்களின் வேலைவாய்ப்பிற்கு அளிக்கப்படும் பயிற்சிகள் மற்றும் தங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது, கல்லூரியில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் திறன் பயிற்சிகள் குறித்தும் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகத் ஜெயப்பிரகாஷ் காந்தி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிபுணர் கலந்து கொண்டு மாணவர்களிடையே பொறியியல் வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். இதில் மாணவர்கள் பெரும்பாலான வேலைவாய்ப்புகள் பொறியியலில் காணப்படுவதும், பொறியாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் மாணவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் எவ்வாறு தங்களை ஆளுமைப்படுத்திக் கொள்வது, புதுமையான கண்டுபிடிப்புகளை ஆராய்வது, புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவது குறித்தும் பேசினார்.

சிறப்பு விருந்தினராக எல்&டி நிறுவனத்தின் கல்வி பிரிவு தலைமை செயல் அதிகாரி பெபினா கலந்து கொண்டு பொறியியல் மாணவர்களுக்கான வாய்ப்புகள் இருப்பதையும் கட்டுமானத்துறையில் இருக்கும் தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் குறித்தும் உரையாற்றினார். இந்த ஆண்டுக்காண மத்திய பட்ஜெட்டில் பொறியியல் துறைக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கியுள்ளதைப் பற்றியும் அதனால் பொறியியல் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதையும் கூறினார்.

இதனையடுத்து பேசிய சிறப்பு விருந்தினர் அஸ்வின், வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டி நிபுணர், கலந்து கொண்டு பொறியியல் துறையில் தகவல் தொழில் நுட்பம் அல்லாத துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், இளநிலை படிப்போடு அல்லாமல் மாணவர்கள் முதுநிலை படிப்புகள் சிறந்த கல்வி நிறுவங்களில் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும் மத்திய அரசால் நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்வது அதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுதல் மற்றும் திறனறித் தேர்விற்கு மாணவர்கள் தயார் செய்ய வேண்டும் என்றும் கூறினார். இன்றைய சூழலில் கட்டுமானத்துறையில் சிவில் மாணவர்களுக்குச் சிறந்த வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதையும் மற்றும் மாணவர்கள் அரசுத் துறையில் எண்ணற்ற காலிப்பணியிடங்கள் சிவில் துறையில் உள்ளத்தையும் கூறினார்.