அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.

பௌதீக அறிவியல் மற்றும் கணினி அறிவியல் புலமுதன்மையர் பத்மாவதி வரவேற்புரையாற்றினார். பல்கலைக்கழக வேந்தர் தியாகராஜன் தமது தலைமையுரையில் உயர்தர கற்றல், கற்பித்தலை மேம்படுத்தும் அறிவுத்திறனுக்கேற்ற கற்பித்தலை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

புதுதில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் மேளாள் செயலர் இராமசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில்: ஆசிரியர்கள் உயர்கல்வி முறையில் வரலாறு மற்றும் வளர்ச்சியைப் புரிந்துக்கொண்டு மாணவர்கள் கல்வி சார்ந்த சவால்களை எதிர்க்கொள்ளும் கற்பித்தலை வழங்கவேண்டும்.

மாணவர்களுக்கு ஏற்ற முற்போக்கான பாடத்திட்டத்தை ஆசிரியர்களால் உருவாக்கமுடியும் என்றும் பயனுள்ள கற்பித்தலில் கொள்கைகளைப் புகுத்தி புதுமையான கற்பித்தல் முறைகளை நடைமுறைப்படுத்தவும் ஆசிரியர்கள் அறிந்திருப்பது நல்லது என்றும் கூறினார். பல்கலைக்கழக கட்டமைப்பில் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது பெருமைக்குரியது எனக் குறிப்பிட்டார்.