தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பசுமை ஆற்றல் தொழில் நுட்பங்கள் குறித்த மாநாடு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான வளர்ந்து வரும் பசுமை ஆற்றல் தொழில் நுட்பங்கள் குறித்த சர்வதேச மாநாடு நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்களும் பி.டெக். ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பயிலும் மாணவர்களும் இணைந்து தேசிய எரிசக்தி பாதுகாப்பு வாரத்தை கொண்டாடும் வகையில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான வளர்ந்து வரும் பசுமை ஆற்றல் தொழில் நுட்பங்கள் குறித்த சர்வேதச மாநாட்டை ஏற்பாடு செய்தனர்.

மலேசியாவின் கெபங்கசான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கமருசமான் சொபியன் பேசுகையில்: புட்டோவோல்டாயிக் தெர்மல் டெக்னாலஜியில் சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் முன்னெற்றங்கள் பற்றி பேசினார்.

கல்லூரியின் குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர் பொறியாளர் ஸ்ரீ கிருஷ்ணா பாலச்சந்திரன் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத் தன்மையைப் எடுத்துரைத்தார்.

மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொடக்கநிலை தொழில் நிறுவனங்கள் இடையேயான தொடர்புகளை அதிகரிக்க இந்த மாநாடு வழிவகுத்துள்ளது. 350க்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்றன்னர்.