குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ஆர்.பி.ஐ

குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4 விழுக்காடாகவும், ரிவர்ஸ்-ரெப்போ விழுக்காடாகவும் மாற்றமின்றி தொடர்வதாக ரிசர்ச் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, நிதிக் கொள்கைகளை வெளியிட்டு ஆர்பிஐ ஆளுநர் கூறியதாவது:

“பணவியல் கொள்கைக் குழு (MPC) கொள்கை ரெப்போ விகிதத்தை 4% ஆக வைத்திருக்க ஒருமனதாக வாக்களித்தது. இதனால்,அதில் எந்தவித மாற்றமும் இல்லை. மேலும்,MSF வட்டி விகிதம் மாறாமல் 4.25% ஆக உள்ளது.அதைப்போல,ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் மாறாமல் 3.35% ஆக உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மற்றும் மாநில வாட் வரி(VAT) உள்ளிட்ட சமீபத்திய குறைப்புக்கள் வாங்கும் திறனை அதிகரிப்பதன் மூலம் நுகர்வு தேவையை ஆதரிக்க வேண்டும் என்றும் ஆகஸ்ட் முதல் அரசாங்க நுகர்வு அதிகரித்து வருகிறது, ஒட்டுமொத்த தேவைக்கு ஆதரவளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.5 விழுக்காடாக இருக்கும் என கணித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.