தேவர் குருபூஜை: கோவையில் பல்வேறு அமைப்பினர் முத்துராமலிங்க தேவர் படத்திற்கு மலரஞ்சலி

தேவர் குருபூஜையையொட்டி கோவை ராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ படத்திற்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் மலரஞ்சலி செலுத்தினார். பல்வேறு அமைப்பினர் சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 வது குருபூஜையை ஒட்டி, கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள 80 அடி சாலையில், முத்துராமலிங்க தேவரின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தேவரின் குருபூஜையை ஒட்டி, கோவையில் தேவேந்திர குல சமுதாயத்தினரும் இணைந்து, கொண்டாடினர். மேலும், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் முத்துராமலிங்க தேவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திமுக மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக், முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சில், திமுக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் உதயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.