காருண்யா பல்கலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்

மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (AICTE) வழிகாட்டுதலின்படியும், காருண்யா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் பால் தினகரனின் ஆலோசனையின் படியும் பிட் இந்தியா ப்ரீடம் இயக்கம் (Fit India Freedom Movement) மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக விளையாட்டுப் போட்டிகள் காருண்யா விளையாட்டு மைதானத்தில் அண்மையில் (கிரிக்கெட், கூடைப்பந்து) நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளை விளையாட்டின் மூலம் மகிழ்விக்கவும், உடற்பயிற்சி அளிக்கவும், பதட்டத்தை குறைக்கவும் இத்திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் மாற்றுத் திறனாளிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வகுக்கப்பட்டது.

காருண்யா பல்கலைக்கழக பதிவாளர் எலைஜா பிளசிங் வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டினார். இதற்கான ஏற்பாட்டை உடற்கல்வி துறை இயக்குனர் காலேப் ராஜன் செய்திருந்தார்.