தூய்மை இந்தியா பணியில் டாக்டர் ஆர்.வி. கலை கல்லூரி மாணவர்கள்!

டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக கல்லூரி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ரூபா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யூனிட்-1 (Unit-I ) மற்றும் யூனிட்-2 (Unit-II) நாட்டுநலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தை தூய்மைப்படுத்தி, அதன் மூலம் கிடைக்கப் பெற்ற குப்பைகளை 120 கிலோ மக்கும் குப்பை, 3 கிலோ மக்காத குப்பைகள் என தரம் பிரித்தனர். அன்றைய தினம் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் தூய்மைப் பணி குறித்து உறுதிமொழி ஏற்றனர். இப்பணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களை கல்லூரி நிர்வாக அறங்காவலர் இராமகிருஷ்ணன் பாராட்டினார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாக மேலாளர் சீனிவாசன், மக்கள் தொடர்பு அலுவலர் அர்ச்சனா மற்றும் உடற்கல்வி ஆசிரியர் அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் உமாபிரியா செய்திருந்தார்.