மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு புலியகுளம்‌ மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும்‌ சுந்தரேசன்‌ லே-அவுட்‌ மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில்‌ மாநகரட்சி ஆணையர்‌ ராஜகோபால் சுன்கரா இன்று நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது பள்ளியின்‌ வகுப்பறைகள்‌, ஆய்வகங்கள்‌, மின்‌ வசதி, குடிநீர்‌ வசதி, கழிப்பறை வசதிகள்‌ ஆகியவை குறித்து, பொறியாளர்களிடம்‌ கேட்டறிந்து பள்ளி வளாகம்‌, அங்குள்ள சிறு பூங்காவின்‌ உட்புறபகுதிகள்‌ மற்றும்‌ சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனவும்‌, பள்ளி வகுப்பறை மற்றும்‌ வளாகத்தில்‌ கொசுமருந்து அடித்தும்‌, குடிநீர் தொட்டிகளை சுத்தம்‌ செய்ய வேண்டுமெனவும், மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகள்‌ மற்றும்‌ மாநகராட்சி ஆரம்பப்பள்ளிகளில்‌ தற்போது நடைபெற்று வரும்‌ தூய்மைப்பணிகளை விரைவாக செய்து முடிக்கவேண்டுமேன ஆணையர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, நேரு நகர்‌ பகுதியிலுள்ள மகளிர்‌ பூங்காவில்‌ ஆய்வு மேற்கொண்டார். பூங்கா மற்றும்‌ உடற்பயிற்சிக்‌ கூடம்‌ ஆகியவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்திய பின்னர்‌ ராமநாதபுரம்‌ நகாப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு சராசரியாக எவ்வளவு நோயாளிகள்‌ சிகிச்சை பெற வருகிறார்கள்‌? சிகிச்சைக்கு வருகை தரும்‌ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்‌ முறைகள்‌ குறித்தும்‌ கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி ஆணையாளர்‌ சுந்தா்ராஜன்‌, உதவி செயற்பொறியாளர்‌ பிரபாகரன்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ சுகாதார ஆய்வாளர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.