நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள்: டூடுல் வெளியிட்ட கூகுள்

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி கூகுள் அவர் படத்தை வைத்து டூடுல் வெளியிட்டுள்ளது.

உலகெங்கும் தற்போது கூகுள் தேடுதளம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. இணையத்தைப் பயன்படுத்துவோருக்குக் கூகுள் என்பது இன்றியமையாத ஒன்றாக ஆகி விட்டது எனவே சொல்லலாம். முதலில் தேடு தளமாக ஆரம்பிக்கப்பட்ட கூகுளில் தற்போது விளம்பரம், தேடுபொறி, கிளவுட் டெக்னாலஜி எனப் பல விதங்களிலும் பரவி உள்ளது.

உலகில் பலமுறை பயன்படுத்தப்பட்ட ஒரே தேடுதளம் கூகுள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு புகழ் பெற்றுள்ள கூகுள் தேடுதளம் சிறப்பு தினங்களில் அதற்கேற்றவாறு டூடுல் எனப்படும் சிறப்புப் படங்களை வெளியிட்டு அந்த தினங்களை கவுரவிப்பது வழக்கமாகும்.

இன்று நடிகர் திலகம் எனப் போற்றப்படும் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்த நாள் ஆகும். எனவே இதைச் சிறப்பிக்கும் வண்ணம் அவரது படத்தை வைத்து கூகுள் ஒரு சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இதற்குப் பலரும் டிவிட்டரில் புகழாரம் சூட்டி உள்ளனர்.