உலகிலேயே சிறிய கணினியை வெளியிட்ட ஐபிஎம்!!!

ஐபிஎம் நிறுவனம் ”உப்புத் தூள்” அளவில் இருக்கும், உலகிலேயே சிறிய கணினியை கண்டுபிடித்து இருக்கிறது. அமெரிக்காவில் நடந்த விழா ஒன்றில் இரண்டு நாட்கள் முன்பு இந்த கணினியை அறிமுகப்படுத்தியது. இதை உருவாக்க மொத்தம் 5 வருடம் ஆனதாக ஐபிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தற்போது எதிர்பார்த்தது போலவே இயங்குவதாக கூறியுள்ளது. இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

இதனை சிலர் மைக்ரோஸ்கோப் கொண்டு பார்க்கவேண்டியுள்ளது. இதன் அளவு 1 மில்லி மீட்டர் அகலம் 1 மில்லி மீட்டர் நீளம் இருக்கும். இதில் 1000க்கும் அதிகமான சிறிய சிப்புகள் இருக்கிறது. எல்லா சிப்புகளும் நேனோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நவீன ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சார்ஜ் ஏற்ற, வயர்லெஸ் டெக்னலாஜி பயன்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் தற்போது இருக்கும் கணினிகளில் செய்ய கூடிய எல்லா விஷயங்களையும் செய்ய முடியாது. ஆனால் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் வந்த விண்டோஸ் எக்ஸ் பி மாடல் கணினிகளில் செய்ய கூடிய விஷயங்களை செய்ய முடியும். அதேபோல் பாதுகாப்பு சார்ந்த பயன்பாடுகளுக்கு இந்த கணினி அதிகம் உதவும்.