தமிழோசை வெளியீட்டு விழா

 

டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி) இளங்கோவடிகள் தமிழ் மன்றம் மற்றும் தமிழ்த்துறையும் இணைந்து மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் விதமாகத்  தமிழோசை இதழ் வெளியீட்டு விழா இன்று (21.3.18) என்.ஜி.பி.கலையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நீ.குப்புச்சாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பெ.இரா.முத்துசாமி அவர்கள் தொடக்கவுரையாற்றிச் சிறப்புச் செய்தார்.

கல்லூரியின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் சு.தங்கமணிகண்டன் அவர்கள் சிறப்பு விருந்தினரைப் பற்றிய அறிமுகவுரையாற்றினார். கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி அவர்கள் தலைமையுரையாற்றினார். தமிழோசை இதழை திருச்சிராப்பள்ளி, முன்னாள் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் சிறப்பு விருந்தினர் திரு.அ.கலியமூர்த்தி I.P.S. அவர்கள் வெளியிட கல்லூரியின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி அவர்கள் பெற்றுக் கொண்டார்.

சிறப்பு விருந்தினர் திரு.கலியமூர்த்தி அவர்கள் உரையாற்றினார். அவர் தமது உரையில், உலகளாவிய மாமேதைகளின் வாழ்வைப் பற்றிய குறிப்புகளையும், தமிழ் மொழியின் தொன்மையையும் பற்றிக் கூறினார். மாணவர்கள் வாழ்வில் சிறக்க தன்னம்பிக்கையை வளர்த்தல் அவசியம் எனவும் வலியுறுத்தினார். தமிழ்த்துறை பதிப்பாசிரியர் முனைவர் த.சிவக்குமார் அவர்கள் நன்றியுரை வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.