ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச டீசல் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்

விஜய் மக்கள் இயக்கத்தின் தேசிய பொது செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான புஸ்ஸி ஆனந்த் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில் கோவை வந்த இவரை வரவேற்கும் விதமாக குறிச்சி நகர இளைஞரணி சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சுகுணாபுரம் அலுவலகம் முன்பாக நடைபெற்றது.

இதில், குறிச்சி நகர தலைவர் பைசல் தலைமை தாங்கினார். முன்னதாக சுகுணாபுரம் அலுவலகத்தில் வந்த புஸ்ஸி ஆனந்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நலத்திட்ட வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர் வாழ்வாதாரம் இன்றி தவித்த ஏழை முதியவருக்கு பெட்டி கடை வைப்பதற்கான பெட்டி மற்றும் பொருட்கள் வழங்கினார்.

தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச டீசல், வழங்கி விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆட்டோக்களுக்கான இலவச இன்சூரன்ஸ் வசதியும் ஏற்படுத்தி கொடுத்தனர். பின்னர் ஏழை எளியோருக்கு மருத்துவ உதவி தொகை மற்றும் அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது.