டெல்லியில் கொரோனா 3 வது அலை?

டெல்லியில் கொரோனா இரண்டாம் அலை நடத்திய கோரத்தாண்டவத்தை இன்றளவும் யாரும் மறந்திருக்க முடியாது. தற்போது கொரோனா தொற்று அங்கு குறைந்திருந்தாலும், விரைவில் மூன்றாவது அலை டெல்லியை தாக்குமா? அல்லது கொரோனா பேரிடரை வெற்றிகொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுகாதார மற்றும் மருத்துவ நிபுணர்கள் நடத்திய ஆய்வில் கிடைத்திருக்கும் தகவலின் படி, டெல்லியில் கொரோனா மூன்றாவது அலை மிக விரைவில் அதாவது இன்னும் இரண்டு வாரத்தில் தனது ஆட்டத் தொடங்கக் கூடும் என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ஐசிஎம்ஆர் தொற்றுநோயியல் துறை நிபுணர், முன்னாள் விஞ்ஞானி, டாக்டர் லலித் காந்த் கூறுகையில்: “டெல்லிக்கு வரும் இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. டெல்லியில் ஏராளமானோர் பயணம் மேற்கொண்டுள்ளனர். குடும்ப உறவுகளை பார்த்து வந்துள்ளனர். மேலும், சுதந்திர தினம் மற்றும் ரக்ஷசா பந்தன் விழாக்களை பலரும் கூட்டமாகக் கூடி கொண்டாடியுள்ளனர். இதனால், கொரோனா தொற்று வேகமாகப் பரவியிருக்க வாய்ப்பிருக்கிறது.

ஒருவேளை அப்படி நடந்திருந்தால், அதன் தாக்கம் இன்னும் 15 நாள்களில் தெரிந்துவிடும். நோய் எதிர்ப்பாற்றல் இருப்பவர்களுக்கு அறிகுறிகள் தெரியவராது. ஆனால், அவர்கள் தொற்றை மற்ற இரண்டு பேருக்காவது பரவியிருப்பார்கள்” என்கிறார்.

 

Source: Dinamani