இந்திய எறிபந்தாட்ட அணியில் ராமகிருஷ்ணா கலைக்கல்லூரி மாணவி !

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பிபிஏ மாணவி கு. ரம்யாகிருஷ்ணன் மாநிலங்களுக்கு  இடையேயான மகளிர் எறிபந்தாட்டத்தில் (Throw Ball) தங்கம்வென்று சாதனைப்படைத்துள்ளார்.

மேலும் இவர் தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய தன் பொருட்டு தற்போது இந்திய மகளிர் எறிபந்தாட்ட அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

மாநிலங்களுக்கு  இடையேயான மகளிர் எறிபந்தாட்ட போட்டி கடந்த மாதம் கோவா வில் 06.07.2021 அன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் தமிழக அணிகர்நாடக அணியை எதிர்கொண்டு விளையாடியது.

விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் கர்நாடக அணியைவீழ்த்தி தமிழக அணிதங்கம் வென்று சாதனைப்படைத்தது. தமிழக அணி சார்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியைச் சார்ந்த பிபிஏ துறை மாணவி கு. ரம்யாகிருஷ்ணன் இடம் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

ஏற்கனவே சட்டீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விளையாடி தனது சிறப்பான பங்களிப்பை நல்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய எறிபந்தாட்ட அணியில் இடம்பெற்று கல்லூரிக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள மாணவியை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லஷ்மிநாராயணசுவாமி அவர்கள் பாராட்டிவாழ்த்தினார்.

கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர்  பி.எல்.சிவக்குமார் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் மாணவிக்குப் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.