ஜனநாயக விரோத செயல் – இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

நாடாளுமன்றம் நடைபெறாத போது 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது ஜனநாயக விரோத செயல் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை புரூக்பீல்டு சாலையில் உள்ள ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கூறியதாவது:

நாடாளுமன்றம் தற்பொழுது செயல்படுகிற முறையானது மிகுந்த வேதனை அளிக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவமதிக்கப்படுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகள் தற்போது மீறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு உள்ள எண்ணிக்கை பலத்தை வைத்துக் கொண்டு விவசாயிகளுக்கு எதிராகவும் மக்களுக்கு எதிராகவும் பொதுப்பணித்துறை ளுக்கு எதிராகவும் செயல்படுகின்றனர்.

நாடாளுமன்றம் நடைபெறாத நிலையில் எப்படி 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது .எனவே நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அவமதிக்கப்படுவதைக் கண்டித்து மக்கள் ஏமாற்றப் பட்டதை கண்டித்தும் வருகிற 23ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தமிழகத்தில் 5,000 இடங்களில் மக்களை சந்தித்து மக்கள் நாடாளுமன்ற இயக்கத்தை நடத்த உள்ளோம். வேளாண் சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றுவதன் மூலம் தனது பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு விலை நிர்ணயம் செய்வதை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்குகிறது

நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் போது அது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளுக்கு அவகாசம் வழங்காததால் அந்த சர்ச்சை ஏற்பட்டது. அது ஏற்புடையது அல்ல என்ற போதிலும் எதிர்க்கட்சிகளுக்கு விவாதம் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும்.

குழப்பம் இருக்கும் போது 25 மசோதாக்கள் நிறைவேற்ற பட்டிருப்பது நியாயமற்றது. அது ஜனநாயக விரோத செயல். மேலும் கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசப்படுவது நியாயமற்றது எனக் கூறினார்.