இந்துஸ்தான் கல்லூரி மாணவர்களால் கொரோனா விழிப்புணர்வு

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பிபிஏ துறை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பாக கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு (06.08.2021) ஏற்படுத்தினர்.

இக்கல்லூரியின் மாணவர்கள் பொதுமக்கள் இடையே கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை அவினாசி ரோடு, நவ இந்தியா சிக்னலில் வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை சாலை போக்குவரத்து விதிகளுக்குட்பட்டும், தமிழக அரசு கொரோனா தடுப்பு விதிகளுக்குட்பட்டும் பொதுமக்களுக்கு முகக்கவசம், சானிடைசர் மற்றும் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 1000 பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் அவர்களுடைய கைகளில் சானிடைசர்களும் வழங்கினர். மேலும் கொரோனா தடுப்பு குறித்த முக்கியத்துவம் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கொரோனா வைரஸ் குறித்து இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதில் கல்லூரியின் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வை ஏற்படுத்திய அனைவரையும் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா சதீஷ்பிரபு, முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் பாராட்டினர்.