வந்துவிட்டது கொளுத்தும் கோடைகாலம்

கோடைகாலம் என்றவுடனே எல்லாருக்குமே ஷாக் அடித்தது போலத்தான் இருக்கும். கொளுத்தும் வெயில், வியர்வை, நாவறட்சி இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். வெயிலில் செல்வதற்கே பயந்து கொண்டு வெயில் ரொம்ப சுட்டெரிக்குதே என்று புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

மேலும், ஈசியாக நோய்களும் வந்து தொற்றிக் கொள்ளும். எந்த உணவுகளை எடுத்துக் கொள்வது, வெயிலில் இருந்து தன்னை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை விவரிக்கிறது இந்தக் குறிப்பு.

இதோ கோடைகால உணவு:

பொதுவாக, கோடைக்காலத்தில் நம் உடலுக்கு அதிக நீர் தேவைப்படுகிறது. காரணம், வியர்வை மூலமாக அதிகப்படியான நீர் வெளியேறி உடலில் தாது உப்புக்களின் அளவு குறைந்து விடுகிறது. இதனை ஈடு செய்வதற்கு கோடைகாலத்தில் குறைந்தது 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

ஆனால், வெறும் நீரை மட்டும் அருந்துவதால் தாது உப்புக்களின் குறைபாட்டை சமன் செய்ய முடியாது. அதற்கு பதிலாக, புதிதாக துண்டு போடப்பட்ட, சாறு நிறைந்த தர்பூசணியை சாப்பிடலாம். தண்ணீர்ச் சத்து நிறைந்த கலோரி குறைந்த தர்ப்பூசணி, வெயில் காலத்தை சமாளிக்க ஏற்ற ஒன்று.

மேலும், அதிக தண்ணீர் சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றான தக்காளி, புற்றுநோய் உள்ளிட்ட பல உடல்நலக் குறைபாடுகளுக்குத் தடை போடக்கூடியது. இது போன்ற அதிக நீர்சத்து நிறைந்த உணவுப் பொருகளை உண்டு கோடை வெயிலிலிருந்து தங்களை காத்துக் கொள்ளுங்கள்.