“ஸ்வச் சர்வெக்ஷான் 2018” ஆலோசனைக்கூட்டம்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய அளவில், தூய்மையான நகரங்கள் தரவரிசைப்பட்டியல் –  ஸ்வச் சர்வெக்ஷான் 2018 (Swachh survekshan 2018) கணக்கெடுப்பில், கோவை மாநகராட்சி சிறந்த தரவரிசைப் பட்டியல் பெறுவதற்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (14.02.18) மாநகராட்சி ஆணையாளர் மரு.க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் என்.நடராஜன், செயற்பொறியாளர் திட்டங்கள் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர்கள் என்.பார்வதி, ஞானவேல், சரவணன், மாநகர நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், உதவி ஆணையர் கணக்கு சுந்தர்ராஜன், அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், மாநகராட்சி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.